திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் முக்கிய பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘பொடி லஸ்ஸி’ என அழைக்கப்படும் அருமாஹந்தி ஜனித் மதுசங்க டி சில்வா, இந்தியாவிலிருந்து இன்று (27) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் சர்வதேச பொலிஸாரின் (Interpol) தலையீட்டைத் தொடர்ந்து, அவர் இலங்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

