Categories: உள்ளூர்

நாட்டின் பல மாவட்டங்களில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அந்தப் பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

Recent Posts

கல்முனை சந்தை வீதியை அதிரவைத்த 16 வயதுச் சிறுவனின் விபத்துச் சம்பவம்

கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…

9 மணத்தியாலங்கள் ago

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம்

தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…

10 மணத்தியாலங்கள் ago

இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது

இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…

10 மணத்தியாலங்கள் ago

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி: 20 இலட்சம் ரூபாய் பணத்தைச் சுருட்டிய 41 வயதுப் பெண் அதிரடிக் கைது!

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…

10 மணத்தியாலங்கள் ago

பொசன் பௌர்ணமியை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…

16 மணத்தியாலங்கள் ago

தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் கோர விபத்து

கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…

16 மணத்தியாலங்கள் ago