காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் இன்று (10) பிற்பகல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. மாளிகாவத்தை பகுதியிலிருந்து வருகை தந்த சுமார் 15 வயதுடைய பாடசாலை மாணவர்கள் குழுவொன்றே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளது.
6 பேரடங்கிய குழுவொன்று இவ்வாறு காலிமுகத்திடல் கடலில் இறங்கியதாகக் குறிப்பிடப்படுகிறது.
அவர்களில் மூவரே இவ்வாறு அலைகளில் சிக்கியுள்ளனர்.
எவ்வாறாயினும், மீட்கப்பட்ட இருவரில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போனவரை தேடி கடற்படை சுழியோடிகள் விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர்.
கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…
தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…
இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…
கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…