Categories: உள்ளூர்

வடிகானுக்குள் சிக்கிய நபர் 2 மணித்தியால போராட்டத்தின் பின் மீட்பு!

மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள நாவற்குடா பகுதியில், வீதியின் குறுக்கே அமைந்துள்ள வடிகானுக்குள் நபர் ஒருவர் சிக்கியதால் நேற்று (13) மாலை அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் இரண்டு மணித்தியால போராட்டத்திற்குப் பின்னர் அவர் தீயணைப்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

நாவற்குடா கத்தாமரப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில், பிரதான வீதியை ஊடறுத்து அமைக்கப்பட்டுள்ள வடிகானுக்குள் நேற்று மாலை 5.30 மணியளவில் நபர் ஒருவர் நுழைந்துள்ளார். இதைக் கண்ட பொதுமக்கள், நீண்ட நேரமாகியும் அவர் வெளியில் வராததால் அதிர்ச்சியடைந்து, காத்தான்குடி பொலிஸாருக்கும் தீயணைப்புப் படைப் பிரிவினருக்கும் உடனடியாகத் தகவல் வழங்கியுள்ளனர்.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்புப் படையினரும் காத்தான்குடி பொலிஸாரும் இணைந்து, வடிகானுக்குள் சிக்கியவரை மீட்கும் தீவிர பணியை முன்னெடுத்தனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

தீயணைப்புப் படையினர் சுமார் 2 மணித்தியாலங்களுக்கும் மேலாகப் போராடி, இரவு 7.30 மணியளவில் வடிகானுக்குள் சிக்கியிருந்தவரைப் பாதுகாப்பாக மீட்டனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர் அப்பகுதியைச் சேர்ந்தவர் என்றும், நேற்று முன்தினமே சிறையிலிருந்து விடுதலையானவர் என்றும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

Recent Posts

கல்முனை சந்தை வீதியை அதிரவைத்த 16 வயதுச் சிறுவனின் விபத்துச் சம்பவம்

கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…

3 மணத்தியாலங்கள் ago

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம்

தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…

4 மணத்தியாலங்கள் ago

இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது

இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…

4 மணத்தியாலங்கள் ago

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி: 20 இலட்சம் ரூபாய் பணத்தைச் சுருட்டிய 41 வயதுப் பெண் அதிரடிக் கைது!

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…

4 மணத்தியாலங்கள் ago

பொசன் பௌர்ணமியை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…

10 மணத்தியாலங்கள் ago

தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் கோர விபத்து

கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…

10 மணத்தியாலங்கள் ago