Categories: உள்ளூர்

களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சித் செய்தி

களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில், 20 கிலோமீட்டர் நீளமுடைய 12 முக்கிய வீதிகளைப் புனரமைக்கும் விசேட வீதி அபிவிருத்தித் திட்டம் இன்று வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் 7 வீதிகளும், கொழும்பு மாவட்டத்தில் 5 வீதிகளுமாக மொத்தம் 12 வீதிகள் இத்திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கப்படவுள்ளன.

இதற்காக மொத்தமாக 692 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், இதன்கீழ் பண்டாரகம பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ரேருகன சமரநாயக்க வீதி (1.22 கி.மீ) மற்றும் கனத்தகொட வீதி (2.36 கி.மீ) ஆகியவற்றின் புனரமைப்புப் பணிகள் இன்று உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

உள்ளடக்கப்படும் ஏனைய வீதிகள்: களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை, புலத்சிங்கள, களுத்துறை ஆகிய பகுதிகளில் கும்புக நாரங்கஹஹேன வீதி, ரணவிரு சமந்த மாவத்தை, எடகந்த வீதி, காலாஹேன சந்தி முதல் மீரஷேன தொழிற்சாலை வரையிலான வீதி, கோனதூவ கவட்டயாகொட திக்வெல்ல வீதி ஆகிய 5 வீதிகளும், கொழும்பு மாவட்டத்தின் ஹோமாகம மற்றும் பாடுக்கை பகுதிகளில் முனமலே வீதி, கஹவல நாகந்தல வீதி, போபே வெவல்கெட்டிய மாஹிங்கல வீதி, தம்பே பைகேவத்தை வீதி, போபேவத்தை வீதி ஆகிய 5 வீதிகளும் இத்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படவுள்ளன.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

இந்த பாரிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் அனைத்துப் பணிகளும் வரும் 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 05 ஆம் திகதிக்குள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

Recent Posts

கல்முனை சந்தை வீதியை அதிரவைத்த 16 வயதுச் சிறுவனின் விபத்துச் சம்பவம்

கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…

5 மணத்தியாலங்கள் ago

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம்

தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…

6 மணத்தியாலங்கள் ago

இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது

இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…

7 மணத்தியாலங்கள் ago

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி: 20 இலட்சம் ரூபாய் பணத்தைச் சுருட்டிய 41 வயதுப் பெண் அதிரடிக் கைது!

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…

7 மணத்தியாலங்கள் ago

பொசன் பௌர்ணமியை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…

12 மணத்தியாலங்கள் ago

தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் கோர விபத்து

கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…

13 மணத்தியாலங்கள் ago