IMF ஆதரவு திட்டங்களைச் செயல்படுத்தும் ஏனைய நாடுகளை விட இலங்கை அதிக முன்னேற்றம்! ஜனாதிபதி அநுரவிடம் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சொனாலி ஜெயின்-சந்திரா தலைமையிலான IMF தூதுக்குழுவினர் இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்.
இதன்போது, இலங்கையின் பொருளாதார மீட்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் அடைந்துள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் நாட்டின் மீளெழுச்சித் திறன் ஆகியவற்றை நாணய நிதியத் தூதுக்குழுவினர் வெகுவாகப் பாராட்டினர். அண்மைக்கால பேரண்டப் பொருளாதார வளர்ச்சிகள் மற்றும் நீடிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் சீர்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது.
தற்போதைய அரசாங்கம் பொருளாதாரத்தை வழிநடத்தும் விதம் சர்வதேச நாணய நிதியத்தின் பெரும் பாராட்டைப் பெற்றது. குறிப்பாக, IMF ஆதரவு திட்டங்களைச் செயல்படுத்தும் ஏனைய பல நாடுகளை விட இலங்கை மிக அதிக முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகத் தூதுக்குழுவினர் சுட்டிக்காட்டினர். அத்துடன், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் அடுத்தகட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தங்களது தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக அவர்கள் உறுதியளித்தனர்.
ஜூன் 24 முதல் 30 வரை IMF தூதுக்குழுவினர் கொழும்பிற்கு மேற்கொண்ட விஜயத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் 07 ஆவது மீளாய்வின் போது, இலங்கையின் திட்டச் செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக மதிப்பீடு செய்யப்படும் என்றும் தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தெரிவித்தனர்.
2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 இல் ஆரம்பம்! அனுமதி அட்டைத் திருத்தங்களுக்கு ஓகஸ்ட் 03 இறுதி நாள்!…
12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் மேஷம் பலன்: உங்களின் கடின உழைப்பிற்கு இன்று சிறப்பான பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும்…
யாழ்ப்பாணத்தில் “வயலின் வித்துவான் லக்ஷமிநாராயண வீதி” உத்தியோகபூர்வமாகத் திறப்பு! இந்திய - இலங்கை முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு! உலகப் புகழ்பெற்ற…
பாடசாலைகளின் இரண்டாம் தவணை நிறைவு! மூன்றாம் தவணை ஆரம்பமாகும் திகதிகளை அறிவித்தது கல்வி அமைச்சு! 2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கப்…
12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் மேஷம் பலன்: தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.…
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்! கைதுக்கு எதிரான மனு மீது மேலதிக பரிசீலனை! தாம் கைது…