உள்ளூர்

எரிபொருள் விலை மாற்றத்தால் பஸ் கட்டணங்களை உயர்த்த அமைச்சரவை அனுமதி

பஸ் கட்டணங்கள் 12 சதவீதத்தால் அதிரடி அதிகரிப்பு! குறைந்தபட்சக் கட்டணம் ரூ.34 ஆக உயர்வு! ஜூலை 5 நள்ளிரவு முதல் அமல்!

நாட்டில் பஸ் கட்டணங்கள் 12 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (National Transport Commission) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அமைச்சரவையின் விசேட ஒப்புதலுக்கு அமைய இந்த கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

இந்த புதிய கட்டணத் திருத்தத்தின்படி, இதுவரை காலமும் ரூ. 30 ஆகக் காணப்பட்ட ஆகக் குறைந்த பஸ் கட்டணம், ரூ. 34 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 05 ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த புதிய பஸ் கட்டணத் திருத்தம் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ளது.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

புதிய கட்டண விபரங்கள்:

  • சாதாரண பஸ் சேவைகள் (Ordinary Services):
    • 100 கிலோமீட்டர் வரையான தூரத்திற்கு — 12% அதிகரிப்பு
    • 100 கிலோமீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட தூரத்திற்கு — 20% அதிகரிப்பு
  • சொகுசு பஸ் சேவைகள் (Luxury Services):
    • 100 கிலோமீட்டர் அல்லது அதற்குக் குறைந்த தூரத்திற்கு — 12% அதிகரிப்பு
    • 100 கிலோமீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட தூரத்திற்கு — 15% அதிகரிப்பு

உலக சந்தை மற்றும் உள்நாட்டு எரிபொருள் விலை மாற்றங்கள் மற்றும் பஸ் உதிரிப்பாகங்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்களைக் கருத்திற்கொண்டு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய பஸ் கட்டணங்களைத் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறிப்பாக, 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் நாட்டில் நிலவி வரும் எரிபொருள் விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் புதிய மெட்ரோ டிரான்ஸிட் (Metro Transit) பஸ்களின் இயக்கச் செலவுகள் என்பன இந்த கட்டண உயர்வில் முக்கிய காரணிகளாகக் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

Recent Posts

உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு அவசர எச்சரிக்கை

2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 இல் ஆரம்பம்! அனுமதி அட்டைத் திருத்தங்களுக்கு ஓகஸ்ட் 03 இறுதி நாள்!…

1 நாள் ago

இன்றைய ராசிபலன்: ஜூலை 25, 2026 (சனிக்கிழமை) | சனி பகவானின் அருளால் இன்று தடைகள் நீங்கி வெற்றி பெறப் போகும் ராசிகள் எவை?

12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் மேஷம் பலன்: உங்களின் கடின உழைப்பிற்கு இன்று சிறப்பான பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும்…

1 நாள் ago

யாழ்ப்பாணத்தில் உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞருக்கு கௌரவம்!

யாழ்ப்பாணத்தில் “வயலின் வித்துவான் லக்ஷமிநாராயண வீதி” உத்தியோகபூர்வமாகத் திறப்பு! இந்திய - இலங்கை முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு! உலகப் புகழ்பெற்ற…

2 நாட்கள் ago

மூன்றாம் தவணை பாடசாலைகள் மீண்டும் எப்போது ஆரம்பம்?

பாடசாலைகளின் இரண்டாம் தவணை நிறைவு! மூன்றாம் தவணை ஆரம்பமாகும் திகதிகளை அறிவித்தது கல்வி அமைச்சு! 2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கப்…

2 நாட்கள் ago

சுக்கிர பகவானின் அருளால் இன்று தனயோகமும் மகிழ்ச்சியும் பெறப்போகும் ராசிகள் எவை?

12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் மேஷம் பலன்: தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.…

2 நாட்கள் ago

தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி வழக்கு! நீதிமன்றம் வந்தார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்! கைதுக்கு எதிரான மனு மீது மேலதிக பரிசீலனை! தாம் கைது…

3 நாட்கள் ago