உள்ளூர்

கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் 2 வாரங்களுக்கு அதிரடியாக மூடல்

டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தல்! கொழும்பு கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் 2 வாரங்களுக்கு அதிரடியாக மூடல்!

கொழும்பு கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் (University of the Visual and Performing Arts) மாணவர்கள் மத்தியில் டெங்கு நோய் மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதன் காரணமாக, பல்கலைக்கழகம் இரண்டு வார காலத்திற்குத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

அனைத்து நடவடிக்கைகளும் சடுதியாக இடைநிறுத்தம்: பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகள், பரீட்சைகள் மற்றும் விடுதிகள் (Hostels) அனைத்தும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) உத்தியோகபூர்வமாகத் அறிவித்துள்ளது.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

வைரஸ் காய்ச்சல் நிலைமை: கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் அண்மைய நாட்களாக டெங்கு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கப்பால், பல்கலைக்கழக வளாகத்தினுள்ளும் விடுதிகளிலும் கடுமையான வைரஸ் காய்ச்சல் நிலைமை ஒன்று பரவி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. மாணவர்களின் ஆரோக்கிய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே பல்கலைக்கழக நிர்வாகமும் UGCயும் இணைந்து இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளன.

துணைவேந்தர்களுடன் அவசரக் கலந்துரையாடல்: அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் டெங்கு பரவல் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவானது (UGC) நாட்டின் அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடனும் விசேட கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தியுள்ளது. பல்கலைக்கழக வளாகங்களைத் தூய்மைப்படுத்துவதற்கும், நோய் பரவலைக் தடுப்பதற்கும் எடுக்க வேண்டிய அவசர உத்திகள் குறித்து இதில் ஆராயப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link