Categories: உள்ளூர்

மட்டக்களப்பு பொது நூலகத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்றைய தினம் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்ட இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு பொது நூலகத்தை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட நிகழ்வில் ஜனாதிபதி முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டார். மத்திய மற்றும் மாகாண அரசுகளின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், நவீன வசதிகளுடன் கூடிய மூன்று மாடிக் கட்டிடமாக இந்த வாசிகசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்ணசேகர, அமைச்சர்களான சுனில் ஹந்துன்நெத்தி, ஆனந்த விஜயபால மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.ஸ்ரீநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பல உயரதிகாரிகளும் அரசியல் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

நிகழ்வின் இறுதியில் மாநகர முதல்வரினால் ஜனாதிபதிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், ஜனாதிபதியினால் நூலக வளாகத்தில் பயன்தரும் மரக்கன்று ஒன்றும் நட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

Recent Posts

கல்முனை சந்தை வீதியை அதிரவைத்த 16 வயதுச் சிறுவனின் விபத்துச் சம்பவம்

கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…

7 පැය ago

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம்

தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…

8 පැය ago

இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது

இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…

8 පැය ago

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி: 20 இலட்சம் ரூபாய் பணத்தைச் சுருட்டிய 41 வயதுப் பெண் அதிரடிக் கைது!

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…

8 පැය ago

பொசன் பௌர்ணமியை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…

14 පැය ago

தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் கோர விபத்து

கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…

14 පැය ago