வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் (OIC) இலஞ்ச குற்றச்சாட்டு ஒன்றின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த அதிரடி கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சில சீன நாட்டவர்களின் பாஸ்போர்ட்டுகள் வெலிக்கடை பொலிஸாரின் பொறுப்பில் இருந்துள்ளன. அவற்றை மீண்டும் அவர்களிடம் ஒப்படைப்பதற்காக, சந்தேகநபரான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சீனர்களிடம் ரூ. 3 இலட்சம் பணத்தை சட்டவிரோதமான முறையில் லஞ்சமாகக் கோரியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது குறித்துப் பெறப்பட்ட ரகசியத் தகவலின் அடிப்படையில் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசேட விசாரணைகளைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்துக் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…
தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…
இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…
கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…