உள்ளூர்

யாழ். பல்கலை. முன்னாள் கலைப்பீடாதிபதி ரகுராமின் அவதூறு வழக்கு

தன் மீது அவதூறு பரப்பியதாக 14 பேருக்கு எதிராக யாழ். பல்கலை. முன்னாள் கலைப்பீடாதிபதி ரகுராம் வழக்கு! ஜூலை 10 இற்கு ஒத்திவைப்பு!

சமூக வலைத்தளங்கள் ஊடாகத் தன் மீது அவதூறு பரப்பப்பட்டதாகத் தெரிவித்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் விசேட வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் (Online Safety Act) 20 ஆம் பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு, நேற்று (01 ஆம் திகதி ஜூலை மாதம் 2026) புதன்கிழமை நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்கின் மேலதிக பரிசீலனைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்துள்ளார்.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிரமணியம் ரகுராம், தன்னைத் தவறான முறைக்கு (துஷ்பிரயோகத்திற்கு) உள்ளாக்கியதாகப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியும், கடந்த இரண்டு வருடங்களாகத் தற்காலிக துணை விரிவுரையாளராகவும் கடமையாற்றிய பெண் ஒருவர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு (UGC) முறைப்பாடு செய்திருந்தார். இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, பல்கலைக்கழக மட்டத்திலான விசேட விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டு தற்போது விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விசாரணைகள் நடந்து வரும் பின்னணியில், முன்னாள் கலைப்பீடாதிபதி ரகுராம் மற்றும் குறித்த மாணவிக்கு இடையிலான உரையாடல்கள் என்ற பெயரில் சில ஒலிப்பதிவுகளும், கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பும் நோக்கில் வெளியிடப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், குற்றச்சாட்டை முன்வைத்த முன்னாள் மாணவி மற்றும் முகப்புத்தகம் (Facebook), டிக் டொக் (TikTok), யூடியூப் (YouTube) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இது குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்ட 14 பேருக்கு எதிராக இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த 14 பேரும் இவ்வழக்கின் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

Recent Posts

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 383 வேலைவாய்ப்புகள்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 383 வேலைவாய்ப்புகள்! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு! இலங்கை பொலிஸ் துணைச் சேவையில் (Police Auxiliary…

දින 1 ago

களுவாஞ்சிக்குடியில் ரூ. 29.5 மில்லியனில் நவீன தபால் நிலையம்!

களுவாஞ்சிக்குடியில் ரூ. 29.5 மில்லியனில் நவீன தபால் நிலையம்! அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ திறந்து வைத்தார்! களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நவீன…

දින 1 ago

இலங்கைக்குள் போதைப்பொருள் கடத்த முயன்ற கனடா நாட்டவர்

கட்டுநாயக்கவில் சுங்கப்பிரிவு அதிரடி! 200 மில்லியன் ரூபா பெறுமதியான 'ஹசீஸ்' போதைப்பொருளுடன் கனடா நாட்டவர் கைது! கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச…

දින 1 ago

உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு அவசர எச்சரிக்கை

2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 இல் ஆரம்பம்! அனுமதி அட்டைத் திருத்தங்களுக்கு ஓகஸ்ட் 03 இறுதி நாள்!…

දින 2 ago

இன்றைய ராசிபலன்: ஜூலை 25, 2026 (சனிக்கிழமை) | சனி பகவானின் அருளால் இன்று தடைகள் நீங்கி வெற்றி பெறப் போகும் ராசிகள் எவை?

12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் மேஷம் பலன்: உங்களின் கடின உழைப்பிற்கு இன்று சிறப்பான பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும்…

දින 2 ago

யாழ்ப்பாணத்தில் உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞருக்கு கௌரவம்!

யாழ்ப்பாணத்தில் “வயலின் வித்துவான் லக்ஷமிநாராயண வீதி” உத்தியோகபூர்வமாகத் திறப்பு! இந்திய - இலங்கை முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு! உலகப் புகழ்பெற்ற…

දින 3 ago