சவர்க்காரங்களின் லேபிள்களில் புதிய விபரங்களை அச்சிடுவது கட்டாயம்! நுகர்வோர் விவகார அதிகார சபை அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!
சந்தையிலுள்ள சிலவகை சவர்க்காரங்களை இறக்குமதி செய்தல், உற்பத்தி செய்தல், களஞ்சியப்படுத்துதல், விநியோகித்தல் அல்லது விற்பனை செய்தலின் போது, அவற்றின் பொதியிடல் அல்லது லேபிள்களில் குறிப்பிட்ட சில விபரங்களை அச்சிடுவதைக் கட்டாயமாக்கி, நுகர்வோர் விவகார அதிகார சபையினால் புதிய கட்டளைகளை உள்ளடக்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் 10(1) (அ) பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டளையானது உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள், களஞ்சியப்படுத்துவோர் மற்றும் வர்த்தகர்களுக்குப் பொருந்தும் வகையில் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, தொடர்புடைய உற்பத்திப் பெயர் தடித்த எழுத்துக்களில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அல்லது அவற்றில் ஏதேனும் இரண்டு மொழிகளில் பிரதான சட்டகத்திலும் (Main panel), மற்றைய மொழியில் வேறு ஏதேனும் ஒரு சட்டகத்திலும் குறிப்பிடப்பட வேண்டும்.
சவர்க்காரம் பொதியிடப்படும் சந்தர்ப்பத்தில், உற்பத்தியில் அடங்கியுள்ள மொத்த கொழுப்புப் பொருளின் அளவு சதவீதமாக (%), தெளிவாகவும் வெளிப்படையாகவும் 2 மில்லிமீற்றருக்கு (2 மி.மீ) குறையாத தடித்த எழுத்துக்களில் அச்சிடப்பட வேண்டும்.
இந்த புதிய ஒழுங்குவிதிகள் பின்வரும் சவர்க்கார வகைகளுக்குப் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது:
நுகர்வோர் விவகார அதிகார சபையின் பதில் தலைவர் எஸ்.எம்.டீ. சூரியகுமாரவின் பரிந்துரைக்கு அமைய, 2027 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த ஏற்பாடுகள் அமுலுக்கு வந்துள்ளதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 383 வேலைவாய்ப்புகள்! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு! இலங்கை பொலிஸ் துணைச் சேவையில் (Police Auxiliary…
களுவாஞ்சிக்குடியில் ரூ. 29.5 மில்லியனில் நவீன தபால் நிலையம்! அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ திறந்து வைத்தார்! களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நவீன…
கட்டுநாயக்கவில் சுங்கப்பிரிவு அதிரடி! 200 மில்லியன் ரூபா பெறுமதியான 'ஹசீஸ்' போதைப்பொருளுடன் கனடா நாட்டவர் கைது! கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச…
2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 இல் ஆரம்பம்! அனுமதி அட்டைத் திருத்தங்களுக்கு ஓகஸ்ட் 03 இறுதி நாள்!…
12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் மேஷம் பலன்: உங்களின் கடின உழைப்பிற்கு இன்று சிறப்பான பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும்…
யாழ்ப்பாணத்தில் “வயலின் வித்துவான் லக்ஷமிநாராயண வீதி” உத்தியோகபூர்வமாகத் திறப்பு! இந்திய - இலங்கை முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு! உலகப் புகழ்பெற்ற…