முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட ஹஜ் முகவர் நிலையங்கள் ஊடாக, நடப்பு 2026 ஆம் ஆண்டில் ஹஜ் கடமைகளை நிறைவேற்றிய யாத்திரிகர்களுக்கான விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
தாங்கள் பயணித்த ஹஜ் முகவர்கள் (Hajj Operators) மற்றும் அவர்கள் வழங்கிய சேவைகள் தொடர்பாக ஏதேனும் குறைபாடுகள் அல்லது முறைப்பாடுகள் இருப்பின், அதனைத் தகுந்த ஆதாரங்களுடன் சமர்ப்பிக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கையிலிருந்து சென்ற யாத்திரிகர்கள் தங்களது முறைப்பாடுகளை நேரடியாகவோ, பதிவுத் தபால் மூலமாகவோ அல்லது திணைக்களத்தின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் (Email) ஊடாகவோ சமர்ப்பிக்க முடியும்.
முறைப்பாடுகளை அனுப்ப வேண்டிய முகவரி: “பணிப்பாளர்”, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இலக்கம் 180, டீ.பி. ஜாயா மாவத்தை, கொழும்பு 10.
குறித்த முறைப்பாடுகள் மற்றும் அதற்கான தகுந்த சான்றுகளை எதிர்வரும் 2026.06.30 ஆம் திகதிக்கு முன்னர் திணைக்களத்திற்குக் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்குமாறு பணிப்பாளர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார். இறுதித் திகதிக்கு பின்னர் கிடைக்கும் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…
தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…
இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…
கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…