இலங்கை ‘ஏ’ மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த மன்னார் வீராங்கனை

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ‘ஏ’ பிரிவில் (Sri Lanka Women’s ‘A’ Team) இடம்பிடித்து, சர்வதேச ரீதியில் தடம் பதித்துள்ள மன்னார் மாவட்டம், பேசாலை கிராமத்தைச் சேர்ந்த வீராங்கனை சதீஸ்குமார் சஜிந்தினியை வரவேற்கும் விசேட நிகழ்வு இன்று (28) காலை மன்னார் அரச பஸ் நிலையத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

பேசாலை புனித பற்றிமா மகா வித்தியாலய பாடசாலை நிர்வாகம் மற்றும் அதன் பழைய மாணவர்கள் சங்கம் ஆகியவை ஒன்றிணைந்து இந்த பாராட்டு மற்றும் வரவேற்பு விழாவினை ஏற்பாடு செய்திருந்தன.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

மன்னார் அரச பஸ் தரிப்பிடத்திற்கு வருகை தந்த வீராங்கனை சஜிந்தினி மற்றும் வருகை தந்த விருந்தினர்கள் அனைவரும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, மங்கள இசை வாத்தியங்கள் முழங்க, அவர்கள் மன்னார் பஜார் பகுதியினூடாக மாவட்டச் செயலகம் வரை உற்சாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

மாவட்டச் செயலகத்தை ஊர்வலம் வந்தடைந்ததும், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்கள் வீராங்கனை சதீஸ்குமார் சஜிந்தினியை நேரில் பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கி உத்தியோகபூர்வமாகக் கௌரவித்தார். இதனைத் தொடர்ந்து, அவர் தனது சொந்தக் கிராமமான பேசாலைக்கு மக்கள் புடைசூழ அழைத்துச் செல்லப்பட்டார்.

மன்னார் பேசாலை 4 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் சஜிந்தினி, பேசாலை புனித பற்றிமா மகா வித்தியாலயத்தின் மிகச்சிறந்த பழைய மாணவியாவார். தனது திறமையால் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்த அவர், சமீபத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் நியூசிலாந்து ‘ஏ’ மகளிர் அணிகளுக்கு இடையிலான சர்வதேசப் போட்டியிலும் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

Share
Published by
elm_admin92

Recent Posts

கல்முனை சந்தை வீதியை அதிரவைத்த 16 வயதுச் சிறுவனின் விபத்துச் சம்பவம்

கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…

6 පැය ago

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம்

தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…

7 පැය ago

இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது

இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…

8 පැය ago

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி: 20 இலட்சம் ரூபாய் பணத்தைச் சுருட்டிய 41 வயதுப் பெண் அதிரடிக் கைது!

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…

8 පැය ago

பொசன் பௌர்ணமியை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…

13 පැය ago

தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் கோர விபத்து

கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…

14 පැය ago