இலங்கைக்கு எதிரான முதலாவது இருபதுக்கு–20 சர்வதேச (T20I) கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டி, தம்புள்ளையில் புதன்கிழமை (07) நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை அணி, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இலங்கை சார்பில் ஜனித் லியனகே 31 பந்துகளில் 40 ஓட்டங்கள் பெற்று அதிக ஓட்டங்களைச் சேர்த்தார்.
பாகிஸ்தான் பந்துவீச்சில் அப்ரார் அஹ்மட் 3 விக்கெட்டுகள், சல்மான் மிர்ஸா 3 விக்கெட்டுகள், ஷடாப் கான் 2 விக்கெட்டுகள் மற்றும் மொஹமட் வாஸிம் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

பாகிஸ்தான் வெற்றியிலக்கு எட்டியது

129 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, சஹிப்ஸடா பர்ஹானின் 36 பந்துகளில் பெற்ற 51 ஓட்டங்கள் உதவியுடன், 16.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது.

இலங்கை பந்துவீச்சில்:

என்ற பெறுபேறுகளை பதிவு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *