இணையவழியில் அபராதம் செலுத்துவோருக்கு பொலிஸ் எச்சரிக்கை
போக்குவரத்து விதிமீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இணையவழியில் (Online) தண்டப்பணம் செலுத்தும் போது பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் கையாளுமாறு இலங்கை பொலிஸார் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், பொலிஸ்மா அதிபரின் (IGP) பெயரைப் போலியாகப் பயன்படுத்திச் செயற்பட்டுவரும் சைபர் அச்சுறுத்தல் மற்றும் மிரட்டிப் பணம் பறிக்கும் மின்னஞ்சல் வலைவமைப்பு தொடர்பாக, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) சைபர் பாதுகாப்பு விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தற்போது தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிவித்துள்ளது.
மோசடி கும்பலின் தந்திரோபாயம் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டுநர்களுக்கு போலியான SMS மற்றும் வட்ஸ்அப் (WhatsApp) செய்திகளை அனுப்பி, அவர்களைத் தவறாக வழிநடத்தி போலியான இணையத்தளங்கள் மூலம் பணம் பறிக்கும் நடவடிக்கைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன.
பொதுமக்களுக்கான பொலிஸாரின் முக்கிய அறிவுறுத்தல்:
உத்தியோகபூர்வமற்ற எவ்வித குறுஞ்செய்திகளையும் (SMS) அல்லது வட்ஸ்அப் லிங்குகளை நம்பி உங்களது தனிப்பட்ட விபரங்களையோ அல்லது பணத்தையோ செலுத்த வேண்டாம் எனவும், சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கல்முனையில் பரபரப்பு! சாரதிக்குத் தெரியாமல் 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சிற்றூர்தி மோதி கடைகள், மின் கம்பங்கள் சுக்குநூறு!…
தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு! தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு (National…
இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது! பொருளாதார மறுசீரமைப்பில் புதிய மைல்கல்! இலங்கையில் வரி செலுத்துவோர்…
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபாய் மோசடி! பாணந்துறையைச் சேர்ந்த பெண் அதிரடிக் கைது! வெளிநாட்டில்…
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும்! கலால் திணைக்களம் அதிரடி அறிவிப்பு! புனித…
கொழும்பில் இருந்து பதுளை சென்ற அரச பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து! 42 பயணிகள் படுகாயம்;…