முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரரான சரத் வீரவங்ச, நிதி குற்றப் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக, சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், அவர் பாணந்துறை பகுதியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருப்பதாக அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்றபோதிலும், அந்த நேரத்தில் சரத் வீரவங்ச அங்கு இருக்கவில்லை.
இருப்பினும், அவர் இன்று (16) கம்பஹாவில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அங்கு சென்று இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் சந்தேகநபர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 383 வேலைவாய்ப்புகள்! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு! இலங்கை பொலிஸ் துணைச் சேவையில் (Police Auxiliary…
களுவாஞ்சிக்குடியில் ரூ. 29.5 மில்லியனில் நவீன தபால் நிலையம்! அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ திறந்து வைத்தார்! களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நவீன…
கட்டுநாயக்கவில் சுங்கப்பிரிவு அதிரடி! 200 மில்லியன் ரூபா பெறுமதியான 'ஹசீஸ்' போதைப்பொருளுடன் கனடா நாட்டவர் கைது! கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச…
2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 இல் ஆரம்பம்! அனுமதி அட்டைத் திருத்தங்களுக்கு ஓகஸ்ட் 03 இறுதி நாள்!…
12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் மேஷம் பலன்: உங்களின் கடின உழைப்பிற்கு இன்று சிறப்பான பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும்…
யாழ்ப்பாணத்தில் “வயலின் வித்துவான் லக்ஷமிநாராயண வீதி” உத்தியோகபூர்வமாகத் திறப்பு! இந்திய - இலங்கை முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு! உலகப் புகழ்பெற்ற…