உள்ளூர்

ஜப்பான் அரசிடமிருந்து இலங்கைக்கு 6 குளிரூட்டப்பட்ட அதிநவீன லொறிகள்

இலங்கையின் கடற்றொழில் துறையில் குளிர்சாதන விநியோகக் கட்டமைப்புத் திறனை (Cold Chain Capacity) மேம்படுத்துவதற்காக, ஜப்பான் அரசாங்கத்தினால் 6 அதிநவீன குளிரூட்டப்பட்ட லொறிகள் (Refrigerated Trucks) இன்று (10) உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அதிமேதகு அகியோ இசோமாதா (Akio ISOMATA) அவர்களினால், கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் (CFC) தலைவர் முகமது நவ்ராஸ் நாசரிடம் இந்த லொறிகள் ஒப்படைக்கப்பட்டன.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

இந்நிகழ்வு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ ராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கடற்றொழில் பிரதி அமைச்சர் கௌரவ ரத்ன கமகே ஆகியோரின் முன்னிலையில் கொழும்பில் நடைபெற்றது.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

ஜப்பான் அரசாங்கத்தின் ‘பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டத்தின்’ (Economic and Social Development Programme) கீழ், 200 மில்லியன் ஜப்பானிய யென் (சுமார் 1.25 மில்லியன் அமெரிக்க டாலர்) முழுமையான மானிய நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இலங்கையின் கடற்றொழில் துறையில் அறுவடைக்கு பிந்தைய இழப்பு (Post-harvest losses) தற்போது 40 சதவீதமாகக் காணப்படுகிறது. விசேடமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து கொழும்பு வரையான 300 முதல் 400 கிலோமீட்டர் தூரப் போக்குவரத்தின் போது, முறையான உறைபதன வசதி இல்லாததால் மீன்களின் தரம் குறைந்து, ஏற்றுமதிச் சந்தையில் பின்னடைவு ஏற்பட்டு வந்தது. இதற்குத் தீர்வாகவே இந்த லொறிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த விநியோக வலையமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக, இத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு மூன்று அதிநவீன ஐஸ் தயாரிக்கும் இயந்திரங்களை (Ice-making machines) வழங்குவதற்கும் ஜப்பான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link