உள்ளூர்

இலங்கையில் சுற்றுலாத்துறை புதிய சாதனை

இலங்கை சுற்றுலாத்துறையில் பாரிய வரலாற்றுச் சாதனை! 11 இலட்சத்தை (1.1 மில்லியன்) கடந்தது சுற்றுலாப் பயணிகளின் வருகை; முதலிடத்தில் இந்தியா!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் மிக வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்து வரும் நிலையில், ஜனவரி மாத தொடக்கம் முதல் இதுவரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சம் (1.1 மில்லியன்) என்ற பிரம்மாண்ட எல்லையைத் தாண்டியுள்ளது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிபரங்களின்படி, ஜனவரி 01ஆம் திகதி முதல் ஜூன் 21ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகை தந்த ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,104,354 ஆகப் பதிவாகியுள்ளது.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

இதேவேளை, ஜூன் 01ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையிலான கடந்த 3 வார காலப்பகுதியில் மட்டும் 82,332 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் இதுவரை வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் வழமை போல இந்தியர்களே முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

  • இந்தியா: 31,158 பயணிகள்
  • ஐக்கிய இராச்சியம் (UK): 6,658 பயணிகள் (இரண்டாமிடம்)
  • சீனா: 5,178 பயணிகள் (மூன்றாமிடம்)

இந்த வருடத்தின் கடந்துள்ள காலப்பகுதியில் ஒட்டுமொத்தமாக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 281,418 ஆகும். இதற்கு மேலதிகமாக, ஐக்கிய இராச்சியத்திலிருந்து (UK) 104,751 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 76,963 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும், இவ்வருடத்தில் மாதமொன்றில் பதிவான அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் வருகை பெப்ரவரி மாதத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 279,328 ஆகக் குறிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தொடர் வருகையானது நாட்டின் பொருளாதார மீட்சிக்கு பாரிய பங்களிப்பை வழங்கி வருவதாகப் பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link