உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர உள்ளிட்ட அரசியலுடன் தொடர்புடைய சிலர், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் உத்தியோகபூர்வ விசாரணைகளுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையிலும், இடையூறு விளைவிக்கும் வகையிலும் திட்டமிட்ட செயற்பாடுகளில் மறைமுகமாக ஈடுபட்டு வருவதாகக் குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID), கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளது.
தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வந்த அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, திடீர் உடல்நலக் குறைவினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறித்து அவசர நகர்த்தல் பத்திரம் (Motion) ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவித்த போதே, கோட்டை நீதவான் பசன் அமரசேனவிற்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.




