செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் பெரும் திருப்பம்! சிறியவர் உட்பட மேலும் 6 என்புக்கூடுகள் மீட்பு! மொத்த எண்ணிக்கை 437 ஆக உயர்வு!
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று (18) வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, சிறியவர் ஒருவரின் என்புக்கூடு உட்பட மேலும் 6 மனித என்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையிலேயே, 36ஆவது நாளான இன்றைய தினம் (18) இந்த அதிரடித் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இன்றைய அகழ்வாராய்ச்சியின் போது புதிதாக ஒரு பெரியவரின் என்புக்கூட்டுடன், சிறியவர் ஒருவரின் என்புக்கூடும் உள்ளடங்கலாக மொத்தம் 6 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளுள் 5 என்புக்கூடுகள் இன்று முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அகழ்வுப் பணியின் போது மனித எச்சங்கள் மட்டுமன்றி, வெள்ளை நிறத்திலான பாசிமணிகள், இரும்புத்துண்டுகள் மற்றும் வளையல் என்பன பிற சான்றுப் பொருட்களாக நீதிமன்றப் பாதுகாப்பின் கீழ் மீட்கப்பட்டுள்ளன.
வித்தியாசமான மண்டையோடு மர்மம்: அத்துடன் மூன்று மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஒரு மண்டையோடு மிகவும் வித்தியாசமான முறையில் கண்டறியப்பட்டுள்ளது. அதனைச் சுத்தம் செய்யும் பணிகள் தற்போது மருத்துவ மற்றும் தொல்பொருள் நிபுணர்களால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில், செம்மணிப் புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் என இதுவரையில் ஒட்டுமொத்தமாக 90 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 437 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றுள் 428 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் மேஷம் பலன்: பணியிடத்தில் உங்களின் தைரியமான முடிவுகள் நற்பலன்களைத் தரும். பொருளாதார நிலை சீராக…
கனடா டொராண்டோவில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே துப்பாக்கிச் சூடு! 4 மாதங்களில் நடந்த 2ஆவது சம்பவம்! கனடாவின் மிகப்பெரிய…
மதுசார இழப்பு எல்லை 0.1% ஆகக் குறைப்பு! மதுவரித் திணைக்களத்தின் தீர்மானத்திற்கு உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு! மதுபான உற்பத்தி மற்றும்…
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்த்து வரும் பதுளை – சொரணாதோட்ட பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள…
இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 383 வேலைவாய்ப்புகள்! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு! இலங்கை பொலிஸ் துணைச் சேவையில் (Police Auxiliary…
களுவாஞ்சிக்குடியில் ரூ. 29.5 மில்லியனில் நவீன தபால் நிலையம்! அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ திறந்து வைத்தார்! களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நவீன…