உள்ளூர்

பிலியந்தலையில் நடுரோட்டில் வெடித்த துப்பாக்கிச் சூடு!

பிலியந்தலையில் பொலிஸார் அதிரடி துப்பாக்கிச் சூடு! கூர்மையான ஆயுதத்துடன் தாக்கிய வன்முறையாளர் கைது! கான்ஸ்டபிள் உட்பட மூவர் வைத்தியசாலையில்!

பிலியந்தலை, போகுந்தர பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் பொலிஸாரைத் தாக்க முற்பட்ட வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நபர் ஒருவர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சந்தேகநபரும், வன்முறைக் கும்பலின் தாக்குதலுக்குள்ளான வீட்டின் இளம் பெண் ஒருவரும் தற்போது தெற்கு கொழும்பு (களுபோவில) போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

முன்னதாக, பொரலெஸ்கமுவ, ஓ.பி.பெரேரா மாவத்தையில் உள்ள வீடு ஒன்றிற்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் கூர்மையான ஆயுதங்களுடன் வந்த நால்வர் அடங்கிய வன்முறைக் கும்பல், அங்கிருந்தவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தி வீட்டிற்கும் பலத்த சேதம் விளைவித்திருந்தது. தாக்குதலின் பின்னர் சந்தேகநபர்கள் பிலியந்தலை பகுதியை நோக்கி தப்பிச் செல்வதாக பொரலெஸ்கமுவ பொலிஸாருக்கு அவசரத் தகவல் கிடைத்துள்ளது.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

அதற்கமைய, பிலியந்தலை போகுந்தர, வீரசிங்க மாவத்தை பகுதியில் பொலிஸார் விசேட சோதனையில் ஈடுபட்டிருந்த போது, தப்பி ஓடிய சந்தேகநபர்களில் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். பொலிஸாரைக் கண்டதும் அவர்கள் மோட்டார் சைக்கிளைத் திருப்பி தப்பியோட முயன்ற போது, பொலிஸ் அதிகாரிகள் அவர்களைத் தடுக்கக் கடுமையாக முயற்சித்துள்ளனர்.

இதன்போது, மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த நபர், தான் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வெட்டித் தாக்கியுள்ளார். இதனால் உடனடியாகச் செயற்பட்ட அந்த கான்ஸ்டபிள், தற்காப்புக்காகத் தனது துப்பாக்கியால் பின்னால் அமர்ந்திருந்த நபரைக் குறிவைத்துச் சுட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு சந்தேகநபரின் இடுப்புப் பகுதியில் பட்டதில், அவர் மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்துள்ளார். உடனடியாகச் செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் அவரை அதிரடியாகக் கைது செய்த போதிலும், மோட்டார் சைக்கிளைச் செலுத்திய மற்றுமொரு சந்தேகநபர் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பண்டாரகம, வீதியகொட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பிலியந்தலை மற்றும் பொரலெஸ்கமுவ பொலிஸ் நிலையங்கள் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், தப்பியோடிய ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்ய வலைவீசியுள்ளனர்.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

Recent Posts

மதுவரித் திணைக்களத்தின் புதிய தீர்மானத்திற்கு எதிர்ப்பு

மதுசார இழப்பு எல்லை 0.1% ஆகக் குறைப்பு! மதுவரித் திணைக்களத்தின் தீர்மானத்திற்கு உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு! மதுபான உற்பத்தி மற்றும்…

4 පැය ago

துன்ஹிந்த நீர்வீழ்ச்சியில் புதிய பார்வையாளர் மையம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்த்து வரும் பதுளை – சொரணாதோட்ட பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள…

4 පැය ago

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 383 வேலைவாய்ப்புகள்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 383 வேலைவாய்ப்புகள்! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு! இலங்கை பொலிஸ் துணைச் சேவையில் (Police Auxiliary…

දින 2 ago

களுவாஞ்சிக்குடியில் ரூ. 29.5 மில்லியனில் நவீன தபால் நிலையம்!

களுவாஞ்சிக்குடியில் ரூ. 29.5 மில்லியனில் நவீன தபால் நிலையம்! அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ திறந்து வைத்தார்! களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நவீன…

දින 2 ago

இலங்கைக்குள் போதைப்பொருள் கடத்த முயன்ற கனடா நாட்டவர்

கட்டுநாயக்கவில் சுங்கப்பிரிவு அதிரடி! 200 மில்லியன் ரூபா பெறுமதியான 'ஹசீஸ்' போதைப்பொருளுடன் கனடா நாட்டவர் கைது! கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச…

දින 2 ago

உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு அவசர எச்சரிக்கை

2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 இல் ஆரம்பம்! அனுமதி அட்டைத் திருத்தங்களுக்கு ஓகஸ்ட் 03 இறுதி நாள்!…

දින 3 ago