தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ (Mindanao) பகுதிக்கு அப்பால் இன்று (08.06.2026) திங்கட்கிழமை அதிகாலை வேளையில் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆகப் பதிவான மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் அதன் அண்டை நாடான இந்தோனேசியா ஆகிய நாடுகளின் கடலோரப் பகுதிகளுக்கு அவசர சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!
பல்வேறு நாடுகளின் புவியியல் நிறுவனங்களின் கணிப்புகள்:
Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
- ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ): இந்த நிலநடுக்கம் கடற்பரப்பில் இருந்து வெறும் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, இந்த நிலநடுக்கத்தின் வீரியம் 8.2 ரிக்டர் அளவில் இருந்ததாகக் குறிப்பிட்டிருந்த போதிலும், பின்னர் அது 7.8 ரிக்டராக மாற்றியமைக்கப்பட்டது.
- பிலிப்பைன்ஸ் முகமை 'பிவோல்க்ஸ்' (PHIVOLCS): இந்த நிலநடுக்கம் தங்களது கணக்கீட்டின்படி 7.0 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்ததாகக் கூறியுள்ளது. அத்துடன் இதனால் கடலோரப் பகுதிகளில் சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், ஒரு மீட்டருக்கும் அதிக உயரமுள்ள சுனாமி அலைகள் உருவாகி பல மணி நேரங்களுக்கு நீடிக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
- இந்தோனேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்: இந்த நிலநடுக்கத்தின் அளவை 7.7 ரிக்டராகக் கணக்கிட்டுள்ளது.
- அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு: நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் கடற்பரப்பில் 3 மீட்டர் (10 அடி) வரையான சுனாமி அலைகள் எழக்கூடும் என அச்சுறுத்தல் எச்சரிக்கையை விடுத்துள்ளது.




