இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் 10-வது டி20 உலகக்கோப்பை தொடரின் நான்காம் நாள் ஆட்டங்கள் இன்று நடைபெறுகின்றன. இன்றைய அட்டவணையில் மூன்று முக்கிய போட்டிகள் இடம்பெற்றுள்ளன.
பாகிஸ்தான் vs அமெரிக்கா
இன்றைய நாளின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டி இதுவாகும். கடந்த 2024 உலகக்கோப்பையில் அமெரிக்காவிடம் அடைந்த அதிர்ச்சித் தோல்விக்கு பாகிஸ்தான் இன்று பழிவாங்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
பாகிஸ்தான் தனது முதல் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி பலமாக உள்ளது. மறுபுறம் அமெரிக்கா தனது முதல் போட்டியில் இந்தியாவிடம் போராடித் தோற்ற நிலையில், இன்று தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யத் துடிக்கிறது.
நேரம்: இரவு 7:00 (இலங்கை நேரம்) இடம்: எஸ்.எஸ்.சி (SSC) மைதானம், கொழும்பு.

