ஹட்டனில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இரண்டு ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து பணத்தைத் திருட முயன்ற சந்தேக நபரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

நேற்று (04) அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேக நபரின் காட்சிகள் பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகியுள்ளன. இது தொடர்பான தகவல்கள் தெரிந்தால் உடனடியாகத் தொடர்பு கொள்ளவும்.
📞 தொடர்புக்கு: குற்றப்பிரிவு ஹட்டன் – 076 167 0258 (பொறுப்பாளர் நிஷாந்த டி சில்வா)


