அக்குரெகொட சட்டத்தரணி தம்பதி படுகொலை வழக்கு! மாலைதீவில் கைதான முக்கிய சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்!
அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மாலைதீவில் வைத்து கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேகநபர் இன்று (04 ஆம் திகதி சனிக்கிழமை) இரவு அதிரடியாக நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இலங்கை பொலிஸாரால் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த இந்தச் சந்தேகநபர், அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி தம்பதியினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பாதாள உலகக் கும்பலினருக்குப் போக்குவரத்து வசதிகளை (வாகன ஏற்பாடுகளை) செய்துகொடுத்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலைச் சம்பவத்தின் பின்னர் இலங்கையிலிருந்து தப்பியோடி மாலைதீவில் தலைமறைவாகியிருந்த நிலையிலேயே, சர்வதேசப் புலனாய்வு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் அவர் அங்கு கைது செய்யப்பட்டிருந்தார். இன்று இரவு தீவை வந்தடைந்த சந்தேகநபர், மேலதிக அதிரடி விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவிடம் (Western Province South Crime Division) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்த அடுத்தகட்ட நீதிமன்ற நகர்வுகள் மற்றும் கொலையின் பின்னணியில் உள்ள முக்கிய சூத்திரதாரிகள் பற்றிய மேலதிக விபரங்களை அறிய எமது இணையதளத்துடன் இணைந்திருங்கள்.




