உள்ளூர்

ஆன்லைன் கடன் மோசடிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி?

அவசர கடன் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்! மொபைல் போன்களை முடக்கும் புதிய மோசடி குறித்து CERT எச்சரிக்கை!

அவசர கடன் வழங்கப்படுவதாக வரும் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், அத்தகைய செய்திகள் மூலம் பகிரப்படும் ஆபத்தான இணைப்புகளை (Links) மற்றும் செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (CERT) பொதுமக்களிடம் அவசரமாகக் கோரியுள்ளது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

சமூக வலைதளங்களில் தற்போது அவசர கடன்களை மிக எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம் எனப் பல போலியான செய்திகள் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. இந்தச் செய்திகளில், சில நிறுவனங்கள் 5,000 முதல் 150,000 ரூபாய் வரையிலும், வேறு சில நிறுவனங்கள் 5 லட்சம் ரூபாய் வரையிலும் கடன் வழங்கத் தயார் எனத் தெரிவிக்கின்றன. “ஆவணங்கள் அல்லது பிணையாளர்கள் தேவையில்லை” (No Documents / No Guarantors) என்பதைத் தான் இவர்கள் தங்களின் முக்கிய கவர்ச்சியான விளம்பரமாகப் பயன்படுத்துகின்றனர்.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

இந்த மோசடி நிறுவனங்களின் உண்மையான நோக்கம் பொதுமக்களுக்குக் கடன் வழங்குவதல்ல, மாறாக அவர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதாகும். கடன் விண்ணப்பிப்பவர்களுக்கு அனுப்பப்படும் ஒரு குறிப்பிட்ட இணைப்பை (Link) கிளிக் செய்யுமாறு அவர்கள் பணிக்கின்றனர். அதை கிளிக் செய்தவுடன், பயனர் அறியாமலேயே ‘ரிமோட் அட்மினிஸ்ட்ரேட்டிவ் டூல்’ (RAT) எனப்படும் அபாயகரமான மென்பொருள் கைபேசிக்குள் நுழைகிறது. இது கைபேசியின் முழுமையான கட்டுப்பாட்டை மோசடிகாரர்களிடம் ஒப்படைத்துவிடுகிறது.

இதன் மூலம் கைபேசியிலுள்ள புகைப்படங்கள், ஆவணங்கள், நண்பர்களின் தகவல்கள் மற்றும் தொலைபேசி எண்கள் அனைத்தையும் அவர்களால் திருட முடியும். குறிப்பாக .apk கோப்புகளைப் பதிவிறக்கினால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் முதலில் சிறிய கடன் தொகையை வழங்கி, பின்னர் அதனைத் திருப்பிச் செலுத்த முடியாத அளவுக்குப் பெரிய கடனாக மாற்றி, வட்டி மற்றும் நிபந்தனைகளைத் தீவிரப்படுத்துவதன் மூலம் பொதுமக்களை அச்சுறுத்துகின்றனர். நிபந்தனைகளை நிறைவேற்றாதவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதுடன், அவர்களின் கைபேசியில் இருந்து திருடப்பட்ட தொடர்புகளைக் கொண்டு நண்பர்கள் முன்னிலையில் அவர்கள் கேவலப்படுத்தப்படுகிறார்கள். இதனால் இலகுவான கடன் பெறச் சென்று இறுதியில் கையில் இருக்கும் பணத்தையும், மானத்தையும் இழக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

யாராவது அல்லது ஏதேனும் போலி நிறுவனம் தனது தனிப்பட்ட தகவல்களைப் பெற்றுள்ளதாகச் சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக 101 என்ற அவசர இலக்கத்திற்கு அழைத்து அது குறித்து அறிவிக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (CERT) அறிவுறுத்தியுள்ளது.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link