மதுசார இழப்பு எல்லை 0.1% ஆகக் குறைப்பு! மதுவரித் திணைக்களத்தின் தீர்மானத்திற்கு உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு!
மதுபான உற்பத்தி மற்றும் சேமிப்பின் போது அனுமதிக்கப்பட்ட மதுசார இழப்பு (Alcohol Loss) எல்லையை 1.5 சதவீதத்திலிருந்து 0.1 சதவீதமாகக் குறைப்பதற்கு மதுவரித் திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு நாட்டின் பிரதான மதுபான உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

கடந்த ஜூலை 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட 991 ஆம் இலக்க மதுவரி அறிவித்தலின் கீழ் இந்த புதிய எல்லை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆண்டுதோறும் கூட்டுத்தொகையாகச் சுமார் 23 பில்லியன் ரூபாயை வரியாகச் செலுத்தும் முன்னணி மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மேலதிக வரிகளைச் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும் என உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

