உள்ளூர்

கொழும்பு கடலில் 17 கொள்கலன்கள் மிதக்கின்றன

கொழும்பு கடற்பரப்பில் 17 கொள்கலன்கள் வீழ்ந்து மிதக்கின்றன! மீனவர்களுக்கு கடற்றொழில் திணைக்களம் அவசர எச்சரிக்கை!

கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல்மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 காலியான கொள்கலன்கள் (Containers) கடலில் விழுந்து மிதந்து கொண்டிருப்பதாகக் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

இவ்விபத்து வட அட்சரேகை 06 54′ மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 079 32′ அருகிலுள்ள கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

தற்போதுள்ள கடல் நீரோட்டத்தின் தன்மைக்கு ஏற்ப, இந்த காலியான கொள்கலன்கள் பேருவலையிலிருந்து நீர்கொழும்பு ஊடாக புத்தளம் வரையிலான கடலோரப் பகுதிகளை நோக்கி, கரைக்கு மிதந்து வருவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறிப்பிட்ட கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மற்றும் பயணிக்கும் அனைத்துப் நெடுநாள் மற்றும் சிறிய மீன்பிடிப் படகுகளும் இது குறித்து மிகுந்த அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஒருவேளை மிதந்து வரும் இந்த கொள்கலன்கள் தென்பட்டால், உடனடியாக அது குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் வானொலி செய்தி மையத்திற்கோ அல்லது அருகிலுள்ள மீன்பிடித் துறைமுக அதிகாரிகளுக்கோ அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்