உலகளவில் குடும்பங்கள் குடியேறி வாழ்வதற்கு மிகவும் உகந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 4-வது இடத்தைப் பிடித்து சர்வதேச அளவில் சாதனை படைத்துள்ளது.
டிஜிட்டல் நிதிச் சேவை நிறுவனமான ‘Remitly’ தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடத்திய 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய ஆய்வின் மூலமே இந்த விபரம் வெளியாகியுள்ளது. சுகாதாரத் தரம், வாழ்க்கைச் செலவு, வேலைவாய்ப்புகள் மற்றும் குடும்பங்களுக்கான உகந்த சூழல் உள்ளிட்ட 34 முக்கிய காரணிகளின் அடிப்படையில் 82 நாடுகள் ஒப்பிடப்பட்டு இந்தத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய விபரங்கள்:
- உலகளவில் 4-வது இடம்: இப்பட்டியலில் ஸ்பெயின், சீனா மற்றும் அமெரிக்கா (USA) ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இலங்கை 4-வது இடத்தைப் பெற்று முன்னணியில் உள்ளது.
- கல்வி மற்றும் குழந்தை பராமரிப்பு: இலங்கையின் சிறந்த கல்வி முறைமை மற்றும் சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் மலிவான குழந்தை பராமரிப்புச் செலவுகள் (Childcare costs) காரணமாகவே இந்த உயர் இடம் கிடைத்துள்ளது.
- பொதுப் போக்குவரத்துச் சாதனை: குடும்பங்களுக்கு அவசியமான சிறந்த பொதுப் போக்குவரத்துத் தொகுதி (Public transport) கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை உலகளவில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் இருந்து தங்களது குடும்பங்களுடன் குடியேற விரும்பும் சர்வதேச மக்களுக்கு, இலங்கையின் கல்வி மற்றும் வாழ்க்கைச் சூழல் மிகவும் சாதகமாக அமைந்துள்ளதை இந்த உத்தியோகபூர்வ அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.




