உள்ளூர்

தியாகம், பொறுமை மற்றும் இறைநம்பிக்கையின் அடையாளம்: முஸ்லிம்கள் இன்று ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையை நிறைவேற்றும் தியாகத் திருநாளான ஈதுல் அல்ஹா எனப்படும் ஹஜ் பெருநாளை உலக வாழ் முஸ்லிம்கள் இன்றைய தினம் பக்தி சிரத்தையுடன் கொண்டாடுகின்றனர்.

இவ்வருட ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக உலகின் பல நாடுகளில் இருந்தும் சுமார் 16 இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் புனித மக்கா, மினா மற்றும் அரபா மைதானங்களில் ஒன்றுகூடியுள்ளனர். இவர்களில் இலங்கையிலிருந்து புனித யாத்திரை சென்றுள்ள சுமார் 3500 ஹாஜிமார்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

அரபா உரையின் மாபெரும் பிரகடனம்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது இறுதி ஹஜ்ஜின் போது வழங்கிய அரபா உரை (ஹஜ்ஜதுல் வதா), காலத்தால் அழியாத மாபெரும் மனிதநேயப் பிரகடனமாக போற்றப்படுகின்றது. இந்த உரை பின்வரும் உயரிய விழுமியங்களை வலியுறுத்துகிறது:

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →
  • உலக சமாதானம் மற்றும் மனித சமத்துவம்.
  • நீதி, மனித உரிமைகள் மற்றும் சகோதரத்துவம்.
  • மனித உயிரின் கௌரவம் மற்றும் பெண்களின் உரிமைகள்.
  • அநியாயங்கள் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து விலகி வாழ வேண்டியதன் அவசியம்.
  • பொருளாதார நீதி மற்றும் சமூக ஒற்றுமை.

📜 நபி இப்ராஹீம் அவர்களின் தியாக வாழ்வு: நபி இப்ராஹீம் அவர்கள் தனது வாழ்வில் சந்தித்த சோதனைகளின் போது கடைபிடித்த அசாத்திய பொறுமை, அவர்களின் தியாகமிகு வாழ்வு, உறுதியான இறைநம்பிக்கை (ஈமான்) மற்றும் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முழுமையாக அடிபணிந்த பண்பு ஆகியவற்றை புனித அல்-குர்ஆன் எடுத்தியம்புகின்றது. அதனை நினைவு கூர்ந்தே இந்த உன்னத திருநாள் கொண்டாடப்படுகிறது.

மனிதநேயம், நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சகவாழ்வு ஆகிய உயரிய பண்புகள் இந்த நாட்டிலும் உலகிலும் வாழும் அனைத்து சமூகங்களிடையேயும் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமென பிரார்த்திக்கும் அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் எமது செய்திப் பிரிவு சார்பாக இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link