உள்ளூர்

கட்டுநாயக்கவில் பாரிய போதைப்பொருள் வேட்டை: கனடா பெண் கைது!

352 மில்லியன் ரூபா பெறுமதியான ஹசீஸ் போதைப்பொருள் மீட்பு! கட்டுநாயக்க விமான நிலையத்தில் கனடா நாட்டுப் பெண் அதிரடிக் கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 352 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹசீஸ் (Hashish) போதைப்பொருள் தொகுதியுடன் கனடா நாட்டுப் பெண் ஒருவர் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

துபாயில் இருந்து எமிரேட்ஸ் (Emirates) விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இப்பெண் மீது சுங்க அதிகாரிகளுக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கட்டுநாயக்க சுங்க போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் அவரது பயணப் பொதிகளைச் சோதனையிட்ட போதே இந்த பெருந்தொகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

கைது செய்யப்பட்ட கனேடியப் பெண்ணிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹசீஸ் போதைப்பொருளின் மொத்த எடை 35 கிலோகிராம் 265 கிராம் என சுங்கத் திணைக்களம் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது. இதன் சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தை மதிப்பு சுமார் 352 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையை சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மையமாகப் பயன்படுத்த இந்த கடத்தல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதா அல்லது உள்நாட்டு விநியோகத்திற்காகக் கொண்டு வரப்பட்டதா என்ற கோணத்தில் சுங்க அதிகாரிகள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இணைந்து மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link