உள்ளூர்

மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவார் நாமல்? அர்ச்சுனா எம்.பி

TamilNews

2029 ஆம் ஆண்டில் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக நாமல் ராஜபக்சவே அதிகாரத்துக்கு வரக்கூடும் என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் வலியுறுத்தியுள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இந்த அதிரடி அரசியல் கணிப்பை வெளியிட்டுள்ளார்.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

நாட்டின் தற்போதைய போக்கின் மீதான பொதுமக்களின் அதிருப்தியானது, ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர வாக்காளர்களைத் தூண்டக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கமைய, 2029 இல் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீண்டும் நாட்டின் உச்ச அதிகாரத்திற்கு வருவார் என ராமநாதன் அர்ச்சுனா கணித்துள்ளார்.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

“இதைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். 2029-இல் நாமல் ராஜபக்ச வருவார். அதை யாராலும் தடுக்க முடியாது. நாமல் ஆட்சிக்கு வர வேண்டும் என்று எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்தவொரு விருப்பமும் இல்லை. ஆனால், நாடு இருக்கும் தற்போதைய நிலையைப் பார்த்தால், மக்கள் ராஜபக்சக்களிடமே மீண்டும் அதிகாரத்தை ஒப்படைப்பார்கள்.”

மேலும், நாமல் ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக வருவதற்குப் பொருத்தமானவரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நாமல் ராஜபக்சவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி தேவையில்லை என்றும், அவர் நேரடியாக ஜனாதிபதியாகவே வருவார் என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்தத் தருணத்தில் தான் அரசியலில் இருக்கப் போவதில்லை என்றும், ஆனால் மக்கள் இதனை நேரில் காண்பார்கள் என்றும் அர்ச்சுனா ராமநாதன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link