உள்ளூர்

காலிமுகத்திடலில் பாரிய சோகம்

காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் இன்று (10) பிற்பகல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. மாளிகாவத்தை பகுதியிலிருந்து வருகை தந்த சுமார் 15 வயதுடைய பாடசாலை மாணவர்கள் குழுவொன்றே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளது. 

6 பேரடங்கிய குழுவொன்று இவ்வாறு காலிமுகத்திடல் கடலில் இறங்கியதாகக் குறிப்பிடப்படுகிறது. 

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

அவர்களில் மூவரே இவ்வாறு அலைகளில் சிக்கியுள்ளனர். 

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

எவ்வாறாயினும், மீட்கப்பட்ட இருவரில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

காணாமல் போனவரை தேடி கடற்படை சுழியோடிகள் விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர்.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link