இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் (SLC) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்:
📱 TikTok: பின்தொடருங்கள் (Follow)
🟢 WhatsApp Channel: இணைந்து கொள்ளுங்கள்
👍 Facebook Page: விருப்பம் (Like) செய்யுங்கள்
நாட்டின் பல பாகங்களிலும் நிலவும் மழையுடனான வானிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் பின்வரும் முக்கிய தொடர்கள் பாதிக்கப்பட்டுள்ளன:
- கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர்.
- ‘பி’ (Major Club Category B) பிரிவின் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர்.
- ஆளுநர் கிண்ணத் (Governor’s Trophy) தொடர்.
வானிலை சீரடைந்த பின்னர், போட்டிகளுக்கான புதிய மற்றும் திருத்தப்பட்ட கால அட்டவணைகள் அறிவிக்கப்படும் என கிரிக்கெட் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.




