இலங்கை தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவின் புதிய தலைவராக முன்னாள் தேசிய கிரிக்கெட் வீரர் கபில விஜேகுணவர்தன (Kapila Wijegunawardena) நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் எதிர்கால கிரிக்கெட் தெரிவு நடவடிக்கைகளை மிகவும் முறையானதாகவும், வெளிப்படைத்தன்மை மிக்கதாகவும் மாற்றியமைக்கும் நோக்கில், விளையாட்டுத்துறை அமைச்சின் அங்கீகாரத்துடன் இந்த புதிய தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய குழுவில் நாட்டின் பல புகழ்பெற்ற முன்னாள் ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
- கபில விஜேகுணவர்தன – தலைவர் (முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்)
- அமல் சில்வா – உறுப்பினர் (முன்னாள் விக்கெட் காப்பாளர்/துடுப்பாட்டக்காரர்)
- ப்ரெண்டன் குருப்பு – உறுப்பினர் (முன்னாள் விக்கெட் காப்பாளர்/துடுப்பாட்டக்காரர்)
- வஜிர வஹாகொட – உறுப்பினர் (முன்னாள் வீரர்)
- வெனிசா டி சில்வா – உறுப்பினர் (முன்னாள் பெண் கிரிக்கெட் வீராங்கனை)
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான அனைத்து கிரிக்கெட் தொடர்களுக்குமான இலங்கை அணிக்கான வீரர்கள் மற்றும் தேசிய குழாமை (Squad) தேர்வு செய்யும் முழுமையான பொறுப்பும், அதிகாரமும் இந்த புதிய தெரிவுக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




