மாணவர்களுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் கல்வி சூழலை உருவாக்கும் நோக்கில், டிஜிட்டல் கற்றல் தொடர்பான புதிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த விடயம் தொடர்பில், கல்வி (உயர்கல்வி உட்பட) பொறுப்புப் அமைச்சராக உள்ள பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரியா தலைமையில், கல்வி டிஜிட்டல்மயமாக்கலுக்கான டிஜிட்டல் டாஸ்க் ஃபோர்ஸ் உறுப்பினர்களுடன் ஆலோசனை நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தக் கலந்துரையாடலில், கல்வித் துறையில் பணியாற்றும் நபர்களுக்கான Online Safety, Digital Wellbeing, Cybersecurity ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான வழிகாட்டல் கட்டமைப்பை உருவாக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

