உள்ளூர்

போலித் தகவல் கொடுத்தால் ஓராண்டு சிறை: அஸ்வெசும சபை எச்சரிக்கை!

‘அஸ்வெசும’ நலன்புரிப் பலன்கள் திட்டத்தின் முதலாம் கட்ட விபரங்களை இற்றைப்படுத்தும் (Update) நடைமுறைக்குரிய தேசிய கணக்கெடுப்புப் பணிகள், வரும் மே மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக நலன்புரிப் பலன்கள் சபை அறிவித்துள்ளது.

நாட்டின் உண்மையான பொருளாதாரக் கஷ்டங்களை எதிர்நோக்கும், அரச நலன்புரி உதவிகள் அவசியமாகத் தேவைப்படும் மக்களைக் கண்டறிந்து அவர்களுக்கு விரைவாக நிவாரணங்களை வழங்குவதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

யாரேனும் நலன்புரிப் பலன்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் போலியான அல்லது தவறான தகவல்களை வழங்கினால், அதனை ஏனைய உத்தியோகபூர்வ வழிமுறைகள் மூலம் கண்டறிவதற்கான விசேட கட்டமைப்பு ஒன்றை சபை தயாரித்துள்ளது.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரிப் பலன்கள் சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ் தவறான விபரங்களை வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும். நீதவான் நீதிமன்ற விசாரணையின் மூலம் இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஓராண்டுக்கு மிகாத சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, வரும் மே 31ஆம் திகதிக்கு முன்னர் உங்கள் வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு உண்மை மற்றும் துல்லியமான தகவல்களை மட்டுமே வழங்கி முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link