உலகச் செய்திகள்

அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் 1.4 மில்லியனாக வீழ்ச்சி!

ஈரானிய நாணயமான ‘ரியால்’ (Rial) முன்னெப்போதும் இல்லாத வகையில் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரானிய ரியாலின் மதிப்பு 1.4 மில்லியனுக்கும் (14 இலட்சம்) அதிகமாகச் சரிந்துள்ளதால் அந்நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.

பொருளாதாரச் சரிவிற்கான முக்கிய காரணங்கள்:

  1. போர் மற்றும் தாக்குதல்கள்: 2025 ஜூன் மாதம் இஸ்ரேலுடனான போர் மற்றும் ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் நாட்டின் ஸ்திரத்தன்மையைச் சீர்குலைத்தன.
  2. சர்வதேசத் தடைகள்: ஈரானின் அணுசக்தித் திட்டம் காரணமாக ஐக்கிய நாடுகள் சபை (UN) மற்றும் மேற்கத்திய நாடுகள் மீண்டும் தடைகளை அமுல்படுத்தியமை.
  3. பணவீக்கம்: கடந்த டிசம்பர் மாதத்தில் ஈரானின் வருடாந்த பணவீக்க விகிதம் 42.2% ஆக உயர்ந்துள்ளது. இது அத்தியாவசியப் பொருட்களின் விலையை வானளாவ உயரச் செய்துள்ளது.

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகச் செய்திகள்

ரஷ்யாவுடன் வர்த்தகம் தொடர்ந்தால் இந்தியாவுக்கு கூடுதல் வரிகள்: டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது மற்றும் அமெரிக்காவின் வரி கொள்கைகள் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். ரஷ்யாவுடன் இந்தியா தொடர்ந்து வர்த்தக
உலகச் செய்திகள்

மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க ஐநா கோரிக்கை

காசா பகுதியில் தொடரும் மோதல்களால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மனிதாபிமான உதவிகளை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை உலக நாடுகளுக்கு கோரிக்கை