அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு (White House) அருகே துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் ஒருவரை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெள்ளை மாளிகையின் பிரதான பாதுகாப்பு வலயத்திற்கு அருகிலுள்ள வீதியொன்றில், சந்தேக நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, உடனடியாகச் செயற்பட்ட அமெரிக்க இரகசிய உளவுத்துறை (Secret Service) மற்றும் பொலிஸ் குழுக்கள் அப்பகுதியை முற்றுகையிட்டு பதில் தாக்குதலை நடத்தின.
Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!
பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த சந்தேக நபர், உடனடியாக மீட்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

