இலங்கை கடற்படையினரும் கல்பிட்டி பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட சுமார் 617 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கல்பிட்டி, குடாவ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த கெப் வண்டி ஒன்றை வழிமறித்துச் சோதனை செய்தபோது, விநியோகத்திற்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த இந்த பீடி இலைகள் கண்டறியப்பட்டன. வடமேற்கு கடற்படை கட்டளையின் ‘விஜய’ நிறுவனத்தைச் சேர்ந்த வீரர்களே இந்தச் சோதனையை முன்னெடுத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் மற்றும் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.



