உள்ளூர் செய்திகள்

ஹல்துமுல்லையில் தனியார் – அரச பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 6 பயணிகள் காயம்

ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொரகுண – கோனகெட்டிய பகுதியில் இன்று (23) மாலை இரண்டு பேருந்துகள் ஒன்றோடொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்து விபரம்: இன்று மாலை 5.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஹப்புத்தளையிலிருந்து கிரவணகம நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தும், பண்டாரவளையிலிருந்து கிரவணகம நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (SLTB) சொந்தமான பேருந்துமே இவ்வாறு நேருக்கு நேர் மோதியுள்ளன.

பாதிப்புகள்:

மோதிய வேகத்தில் இரண்டு பேருந்துகளின் முன்பகுதிகளும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

விபத்தின் போது பேருந்துகளில் பயணித்த 6 பயணிகள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஹல்துமுல்ல மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள்

குஷ் போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

சுமார் ரூ. 500 மில்லியன் பெறுமதியான குஷ் (Kush) போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து