உள்ளூர்

உலக சந்தை நிலவரப்படி இம்முறை எரிவாயு விலை திருத்தம்

ஜூன் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு (LPG) விலை திருத்தம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நாளை மறுதினம் (ஜூன் 04) வெளியிடப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஜூன் 5 ஆம் திகதி முதல் புதிய எரிவாயு விலை திருத்தத்தை நாட்டில் அமுல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

மாதாந்த எரிவாயு விலை திருத்தத்திற்குத் தேவையான அறிக்கைகள் தற்போது நிதி அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான இறுதி அறிக்கை நாளை மறுதினம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

உலக சந்தையில் தற்போது நிலவும் எல்பிஜி எரிவாயுவின் விலை நிலவரங்களுக்கு அமையவே இம்முறை உள்நாட்டில் எரிவாயு விலையைத் திருத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த மே மாதத்தில் லிட்ரோ எரிவாயு விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் இருக்க அந்த நிறுவனம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link