தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட சுமார் 2 கோடியே 11 இலட்சம் ரூபா பெறுமதியுடைய ‘குஷ்’ ரக போதைப்பொருளுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உட்பட மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்தில் சிக்கிய கடத்தல்
இன்று அதிகாலை 12.35 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து தாய்லாந்து ஏர்வேஸ் (Thai Airways) விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பயணி ஒருவரை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனையிட்டனர்.
அவரது பயணப் பையின் ரகசியப் பகுதியில் இரண்டு பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 116 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சர்வதேச சந்தைப் பெறுமதி சுமார் 21,160,000 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

