கந்தர, தெவுந்தர பகுதியில் பல்பொருங் அங்காடி ஒன்றிற்கு அருகில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த நபர் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
டிலைட் என அழைக்கப்படும் 55 வயது வர்த்தகர் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த நபர் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய நபராக இருக்கலாமென பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
மோட்டார் வண்டியில் வந்த இருவர் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.


