உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: எம்பி அர்ச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகைக்குச் செருப்பு மாலை!

யாழ்ப்பாணத்தில் பரபரப்பு! எம்பி அர்ச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகைக்குச் செருப்பு மாலை: தெல்லிப்பளை கூட்டக் குழப்பத்தின் எதிரொலி!

யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகை (Cut-out) வைக்கப்பட்டு, அதற்குச் செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட விசித்திரமான மற்றும் பரபரப்பான சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக நடைபெறும் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்வது, சபை நாகரீகமின்றிச் செயற்படுவது மற்றும் கூட்டங்களை திட்டமிட்டுக் குழப்புவது போன்ற செயல்களில் அர்ச்சுனா இராமநாதன் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகப் பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் பரவலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

இந்த நிலையில், நேற்று (18) நடைபெற்ற தெல்லிப்பளை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திலும் அர்ச்சுனா இராமநாதன் கலந்துகொண்டு மிக மோசமான வார்த்தைப் பிரயோகங்களில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான காணொளிகள் (Videos) சமூக ஊடகங்களில் வெளியாகி, பொதுமக்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களையும் விவாதங்களையும் தோற்றுவித்துள்ளது.

இந்தச் சபை நாகரீகமற்ற தொடர் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே, யாழ்ப்பாண நகரின் பிரதான வீதியில் அவரது பதாகைக்குச் செருப்பு மாலை அணிவித்து மக்கள் தங்களது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் தற்போது யாழ். அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link