ரற்ற காலநிலை மற்றும் தொழில்நுட்பக் காரணங்களால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – மட்டக்களப்பு இடையிலான “மீனகயா” (Meenagaya Night Mail) இரவு நேர புகையிரத சேவை, எதிர்வரும் பிப்ரவரி 23-ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, பயணிகளின் வசதிக்காக பின்வரும் கால அட்டவணையின் கீழ் சேவைகள் இடம்பெறவுள்ளன:
புதிய நேர அட்டவணை:
1. கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு (23.02.2026 முதல்):
- புறப்படும் நேரம்: இரவு 07.00 மணி (கொழும்பு கோட்டை)
- வந்தடையும் நேரம்: அதிகாலை 04.50 மணி (மட்டக்களப்பு)
2. மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு (24.02.2026 முதல்):
- புறப்படும் நேரம்: இரவு 08.00 மணி (மட்டக்களப்பு)
- வந்தடையும் நேரம்: அதிகாலை 05.30 மணி (கொழும்பு கோட்டை)
மட்டக்களப்பு மார்க்கமான புகையிரத பாதைகள் சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைக்கு இணங்க இந்த இரவு நேர சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


