உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில், இலங்கையிலும் எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டியது அவசியமானது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
விலை அதிகரிக்கப்படாவிட்டால், நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் 43 சதவீத பங்களிப்பை வழங்கும் தனியார் துறை விநியோகத்தை நிறுத்தக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.

