இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (Ceypetco) நேற்று (02) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை அதிகரித்ததைத் தொடர்ந்து, லங்கா ஐ.ஓ.சி (LIOC) நிறுவனமும் தனது எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.
புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்:
📱 TikTok: பின்தொடருங்கள் (Follow)
🟢 WhatsApp Channel: இணைந்து கொள்ளுங்கள்
👍 Facebook Page: விருப்பம் (Like) செய்யுங்கள்
இதன்படி, லங்கா ஒட்டோ டீசல் மற்றும் 92 ரக பெற்றோல் ஆகியவற்றின் விலைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் ஏதுமில்லை என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
புதிய விலைகளின் விபரம்:
- லங்கா ஒட்டோ டீசல்: 392 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
- 92 ரக பெற்றோல்: 410 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 92 ரக பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றுடன் சேர்த்து ஏனைய எரிபொருள் வகைகளான 95 ரக பெற்றோல், சுப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளையும் உயர்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



