உள்ளூர்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையானார் மஹிந்த ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனத்திற்குப் புதிய விமானங்களைக் கொள்வனவு செய்தபோது, சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சமாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் பாரிய ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த விசேட அறிவித்தலுக்கு அமைவாக, இன்று காலை அவர் ஆணைக்குழுவின் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.

இந்தச் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றிய பிரியங்கர ஜயரத்னவையும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானக் கொள்வனவு ஒப்பந்தங்களின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து இவர்களிடம் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்:

elm_admin92

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

30 இலட்சம் ரூபாய் இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முயன்றபோது கைது செய்யப்பட்ட குருநாகல் மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் மொஹமட் மொயினுதீன், இந்த மாதம் 21ஆம்
Share via
Copy link